ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தரான கல்லேல்லே சுமனசிறி தேரர் தனது பதவி விலகியுள்ளார்.
இவர், வேந்தராக நியமனம் பெற்று ஒருவாரத்தில் பதவி விலகியுள்ளார்.
கல்லேல்லே சுமனசிறி தேரர், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டார்.
கடந்த 14 ஆம் திகதி நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

நியமனம் பெற்ற ஒருவாரத்தில் பதவி விலகிய பல்கலைக்கழகத்தின் வேந்தர் வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரர், ஹரங்கஹவ மொலகொட ரஜமகா விகாரையின் விகாராதிபதியாவார்.
அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபையின் கண்டி மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றும் அவர், ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளார்.