ஜா-எல, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உயிரிழந்த இளைஞனின் உடலில் சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 30 வயது மதிக்கத்தக்கவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் அடையாளம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.