வாள் ஒன்றினை உடைமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது சம்மாந்துறை பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (23) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சென்னல்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரவு வேளையில் சம்மாந்துறை பெருங்குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 39 வயதுடைய சந்தேக நபர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இரண்டரை அடி நீளமான வாள் ஒன்றும் சந்தேக நபர் வசமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர் சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.