பலாங்கொடையில் உள்ள தனியார் பல் சிகிச்சை நிலையம் ஒன்றில் பல் ஒன்றை அகற்றிய பின்னர் ஏற்பட்ட நோய் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை, படுவத்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பல் அகற்றப்பட்ட பிறகு ஏற்பட்ட நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.
அத்துடன், பல் அகற்றப்படுவதற்கு முன்னர் அவருக்கு எந்த நோயும் இருக்கவில்லை என்று உயிரிழந்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.