நிதி அமைச்சின் பெயரில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 257 வாகனங்களில் 176 வாகனங்களின் இருப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், இந்த 176 வாகனங்கள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமைக் கணக்கியல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிதி அமைச்சின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் இருப்பு மற்றும் உரிமையை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நிதி அமைச்சகத்திற்குச் சொந்தமான 44 வாகனங்கள் டிசம்பர் 31, 2023 நிலவரப்படி பிற நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவை முறையாக ஒப்படைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், நிதி அமைச்சில் இருந்து மற்ற நிறுவனங்களிடமிருந்து 11 வாகனங்களை கையகப்படுத்தியிருந்தாலும், அதுவும் முறையாக செய்யப்படவில்லை என்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.