மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்துவந்த பொருளை திறந்துபார்க்கமுற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய வரதராஜன் என்னும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.

இவர் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
நான்கு இளைஞர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது குறித்த பொருள் கடலில் மிதந்து வந்த நிலையில் அதனை திறக்கமுற்பட்டபோதே வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
