வட மாகாணத்தை தாமே ஆட்சி செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இந்தக் காரணத்திற்காக, நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தான்ஒரு கட்சித் தலைவராக இருப்பதால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச எனக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

தனது பகுதிகளில் வாள்வீரர்கள் கும்பல் ஒன்று வந்து மக்களை துண்டு துண்டாக வெட்டுகின்றனர். அங்கு பாதிக்கப்பட்டும் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட வாறு இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்