Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பிலும் களமிறங்குகிறது தமிழரசுக் கட்சி; சுமந்திரன் அறிவிப்பு

கொழும்பிலும் களமிறங்குகிறது தமிழரசுக் கட்சி; சுமந்திரன் அறிவிப்பு

2 years ago
in செய்திகள்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருவதுடன் இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது கொழும்பு வாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கொழும்பு மாநகர சபையில் ஆசனங்களைக் கைப்பற்றுவது தொடர்பில் கட்டம் கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளது.

இது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சட்டத்தரணி சி.இரத்தின வடிவேல் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய முதற்கட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கட்சியின் செயற்பாட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்தத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள் தமது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், வட்டாரம், அரசியல் செயற்பாடுகளில் கொண்டிருக்கும் அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் செயலாளர், இலங்கைத் தமிழரசுக்கட்சி, இலக்கம் 40, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியின் ஊடாக கட்சியின் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்,

தற்போது நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் கலாசாரத்துக்கு ஈடுகொ டுக்கும் விதமாகவும், கொழும்புவாழ் தமிழ் மக்களால் நீண்டகால மாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும் கட்சியினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!
செய்திகள்

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!

September 14, 2026
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

September 14, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
Next Post
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு