யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தில் மது போதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்தனர். குறித்த நபரை வெளியில் விடுவதாக கூறி பொலிஸ் உயர் அதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளார்.
அந்நிலையில் குறித்த நபரை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய வேளை நீதிமன்று அந்நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் , ஒரு மாத காலத்திற்கு சாரதி அனுமதி பத்திரத்தை இடை நிறுத்தியுள்ளது.
அதானல் பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு பணம் கொடுத்த நபர் , யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரிடம் முறையிட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்