Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“லேடி சூப்பர் ஸ்டார்” என்று என்னை அழைக்க வேண்டாம்; நடிகை நயன்தாரா கோரிக்கை

“லேடி சூப்பர் ஸ்டார்” என்று என்னை அழைக்க வேண்டாம்; நடிகை நயன்தாரா கோரிக்கை

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரபல நடிகை நயன்தாரா தன்னை “லேடி சூப்பர் ஸ்டார்” என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

“என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும்தான் அதை அழகு சேர்த்துள்ளது.

என் வெற்றியின் போது என் தோளில் சாய்த்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னைத் தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள். லேடி சூப்பர்ஸ்டார் நீங்கள் பலரும் என்னை “லேடி சூப்பர்ஸ்டார்” என்று அன்புடன் அழைத்து வாழ்த்தியிருக்கிறீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை “நயன்தாரா” என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது. ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும். பட்டங்களும் விருதுகளும் மதிப்பு மிக்கவைதான், ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலை தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும்.

நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் அன்பின் மொழி நம்மை எல்லா எல்லைகளையும் கடந்து இணைத்திருக்கிறது. எதிர்காலம் எதைக் கொண்டுவந்தாலும், உங்கள் ஆதரவு என்றும் மாறாது என்பதைத் தெரிந்துகொள்வதில் எனக்கு பேரானந்தம்.

அதேசமயம், உங்கள் அனைவரையும் மகிழ்விக்க என் கடின உழைப்பு தொடர்ந்து இருக்கும். சினிமாதான் நம்மை ஒன்றாக இணைக்கிறது – அதை நாமெல்லோரும் சேர்ந்து கொண்டாடிக்கொண்டே போகலாம்!” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடிகர்கள் அஜித், கமல் ஆகியோரும் கூட எந்தவொரு புனை பெயரையும் கொண்டு அழைக்க வேண்டாம் என அறிவித்திருந்தனர். தங்கள் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டு தங்களை அழைக்குமாறு இருவரும் அறிவித்திருந்தனர். இப்போது அந்த வரிசையில் நயன்தாராவும் இணைந்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உலகிலேயே சிகரெட் விலை அதிகமுள்ள நாடாக இலங்கை!; ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் தகவல்
செய்திகள்

உலகிலேயே சிகரெட் விலை அதிகமுள்ள நாடாக இலங்கை!; ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் தகவல்

November 2, 2026
33 அரச நிறுவனங்களைக் கலைக்க நடவடிக்கை; நிதி அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

33 அரச நிறுவனங்களைக் கலைக்க நடவடிக்கை; நிதி அமைச்சு அறிவிப்பு!

November 2, 2026
மயிலத்தமடு பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக பெரிதுபடுத்துகின்றனர்; திலகநாதன்
செய்திகள்

மயிலத்தமடு பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக பெரிதுபடுத்துகின்றனர்; திலகநாதன்

November 2, 2026
வடகிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு; மயிலத்தமடு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்!
செய்திகள்

வடகிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு; மயிலத்தமடு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்!

November 2, 2026
“சாணக்கியனின் தொகுதிகளிலிருந்தே வடி சாராயம் உற்பத்தியாகிறது!”; அந்தனிசில் ராஜ்குமார்
காணொளிகள்

“சாணக்கியனின் தொகுதிகளிலிருந்தே வடி சாராயம் உற்பத்தியாகிறது!”; அந்தனிசில் ராஜ்குமார்

November 2, 2026
இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!
செய்திகள்

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை ஆற்றில் வீசிய கொடூரம்; நால்வர் கைது!

November 2, 2026
Next Post
பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு