திருகோணமலை மாவட்ட மொறவெவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட கட்டு குளம் வயல் நில பகுதியில் விழுந்து கிடந்த யானையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இன்று (06) யானை விழுந்து கிடந்ததை பார்த்த மக்கள், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு வந்த திணைக்கள அதிகாரிகள் யானையை மீட்டெடுத்துள்ளனர்.
அத்துடன், குறித்த யானைக்கு தற்போது சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.
யானை இவ்வாறு விழுந்து கிடந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.