முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லம், உத்தியோகபூர்வ கார், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஆறு அதிகாரிகள், பொலிஸ் சிறப்புப் படையணியைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் ஊதியச் சலுகைகள் என்பவற்றை நிறுத்தி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இதேவேளை தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் சரணடைவார் என்ற நம்பிக்கையில், பல ஊடகவியலாளர்கள் பல நாட்களாக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் முன் காத்திருந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.