Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கிய மன்னார் நீதவான்

இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கிய மன்னார் நீதவான்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை கடல் எல்லை பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் மேலும் ஒரு மீனவருக்கு இரண்டரை இலட்சம் ரூபா தண்டப் பணமும் விதித்து விடுதலை செய்யுமாறு மன்னார் நீதவான் நேற்று (7) மாலை தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதே நேரம் நபர் ஒருவர் அனுமதி பத்திரம் இன்றி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் இரண்டாவது தடவையாக ஈடுபட்டமை கண்டறியப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு 24 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 23/02/2025 தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 32 மீனவர்களில் நான்கு மீனவர்கள் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய மீனவர்களை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

அதே நேரம் கடந்த 02/02/2025 கைதுசெய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களில் 9 பேர் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதுடன் ஒருவர் இரண்டாவது தடவை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 20/02/2025 கைதுசெய்யப்பட்ட நான்கு மீனவர்களும் முதல் குற்றத்துக்காக 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் நபருக்கு தலா இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்று முன் தினம் மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்களையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்
செய்திகள்

பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது தோல்வியடைந்த அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்; இளங்குமரன்

June 7, 2026
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
Next Post
இஸ்லாமியத் திருமணச் சட்டம் எப்போது மாறும்?; தயாசிறி சபையில் கேள்வி!

இஸ்லாமியத் திருமணச் சட்டம் எப்போது மாறும்?; தயாசிறி சபையில் கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு