தேசிய கீதத்தை சிதைத்து பாடியதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர் மட்டத்தில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்திருந்தார்.
தேசிய கீதத்தை சிதைத்து பாடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்ஹவன்ச இன்று பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்க அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.