Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குக!; ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை

ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குக!; ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை

59 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில், அவருக்கு உடனடியாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே அக்கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம், மகாநாயக்க தேரர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்கான அதிகபட்ச சிறைத்தண்டனை 18 மாதங்கள் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அக்கட்சி, குறித்த குற்றத்திற்காக ஞானசார தேரர் ஏற்கனவே 10 மாதங்களுக்கும் மேலாகச் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கு அமைய, கடந்த காலத்திலும் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் அவருக்கு மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது.

பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றமைக்கு ஐ.தே.க. எதிர்ப்பு

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரிய பேரணியிலோ அல்லது சத்தியாக்கிரகப் போராட்டத்திலோ கலந்துகொள்ளாத பௌத்த பிக்குகளுக்கு எதிராகவும் அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறான நடவடிக்கை பாரிய தவறு எனக் குறிப்பிட்டுள்ள அக்கட்சி, இதற்கு எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஞானசார தேரரின் காவியுடை அகற்றப்படுவதற்கு உத்தரவிட்டவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணையொன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஞானசார தேரரின் சிறைவாசத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழக சிறை ஒன்றிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்
உலக செய்திகள்

தமிழக சிறை ஒன்றிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்

October 27, 2026
சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!
செய்திகள்

சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

October 27, 2026
செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!
செய்திகள்

செம்மணி விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை; அனைத்து அநீதிகளுக்கும் நீதி கிடைக்கும்!

October 27, 2026
தீபாவளிக்கு முன்பே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை
செய்திகள்

தீபாவளிக்கு முன்பே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் வழங்கப்பட வேண்டும்; செந்தில் தொண்டமான் கோரிக்கை

October 27, 2026
100 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது; கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!
செய்திகள்

100 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது; கைதுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

October 27, 2026
யானைகளுக்கும் அம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்; சஜித்
செய்திகள்

யானைகளுக்கும் அம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்; சஜித்

October 27, 2026
Next Post
சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

சீரற்ற காலநிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு