நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் நாளை (28) மீண்டும் திறக்கப்படும் என கல்வி பிரதி அமைச்சர் மதுர செவிரத்ன தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை நிலைமையைக் கருத்திற்கொண்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் நேற்று (27) நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு விடுமுறை வழங்கியிருந்தது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வ அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், நாளை முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என கல்வி பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.







