கார்ல்டன் மாளிகைக்கு வந்த உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் விரும்பினால், இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தானும் போட்டியிடுவேன் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நேற்று (09) தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இவர்கள் விரும்பினால், நானும் தேர்தலில் போட்டியிடுவேன்” என்று சமல் ராஜபக்ச கூறியபோது பலர் நக்கலாக சிரித்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் சென்று வருவதாக சமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
அதன்படி, கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வீழ்ச்சியடைந்ததாகவும், அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.