நோய்களை குணப்படுத்துவதாக இந்தியாவிலிருந்து வருகை தந்து, யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மத பிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர், சுற்றுலா விசா நடைமுறைகைள மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறை புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் (08) இரண்டு மதபோதகர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக நாடுகடத்தப்பட்டனர்.

இதேவேளை இந்தியாவில் சுற்றுலா விசாவில் வந்து, யாழ்ப்பணத்தில் சிற்பவேலைகளில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் மற்றும் யாழில் உள்ள உணவகங்களில் பணிபுரிந்த ஐவர் என மேலும் 13 இந்தியப் பிரஜைகள் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக சென்னைக்கு நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.