காஸாவிற்கான மின்சார விநியோகத்தை துண்டிக்குமாறு இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேலியர்களை விடுவிப்பதற்காக அமெரிக்கத் தரப்புகள் மிகவும் உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இன்று (10) தோஹாவிற்கு ஒரு குழுவை அனுப்புவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காஸாவிற்கு அனுப்பி வைக்கப்படும் அனைத்து மனிதாபிமான நிவாரணங்களையும் இஸ்ரேல் தொடர்ந்து தடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக காஸாவிலுள்ள 6 வெதுப்பகங்ளின் செயற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.