Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது; மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது; மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் மூன்று சுயேட்சைக்குழுக்கள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களுக்காக எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள பெண் வேட்பாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (09) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சின்னஊறணி அமெரிக்கமிசன் மண்டபத்தில் மன்னார் பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பங்கேற்கவுள்ள புதிய அரசியல் வாதிகளுக்குப் புதிய அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் விகையில் இந்த விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

மன்னார் பெண்கள் அபிவிருத்தி நிறுவன நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.அர்ச்சுதன் வளவாளராகக் கலந்து கொண்டு பெண்களின் பங்குபற்றுதலை அதிகரிப்பதற்கான நடைமுறைச் சட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்தார்.

செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான், மன்னார் பெண்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட உறுப்பினர் சியாமினி மற்றும் பெண் அரசியல் பங்குபற்றுனர்கள்,ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தேர்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் அமுலுக்கு வரவுள்ள நிலையில் இச்சட்டங்களில் குறிப்பாக ஊழலுக்கு எதிரான சட்டங்களும்,உள்ளூராட்சி தேர்தலில் பெண்கள் பங்குபற்றுதலில் உள்ள சட்ட திருத்தங்கள் தொடர்பாகவும் விரிவாக கருத்துகள் வழங்கப்பட்டதுடன் உள்ளூராட்சிமன்ற நடைமுறைகள்,அதன்போது பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவான கருத்துரைகள் வழங்கப்பட்டன.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

September 15, 2026
மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
செய்திகள்

மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

September 15, 2026
யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்
காணொளிகள்

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

September 15, 2026
Next Post
கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே சி.ஐ.டி முன் ஆஜர்

கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே சி.ஐ.டி முன் ஆஜர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு