அம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெட்டிய, புஹுல்ஹேன பகுதியில் பெண்ணொருவரின் சடலம் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புஹுல்ஹேன பகுதியில் உள்ள காணியொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வீரகெட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் போது, உயிரிழந்தவர் விதரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவரது உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், உடல் தங்கல்லை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








