முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இலக்குவைத்து தாக்குதல் நடத்த உளவுத் தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
செல்லையா பியூபாகரன் என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக இறுதித் தீர்ப்பின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அவருக்கு பிணை அனுமதிக்கப்பட்டது.
எனினும், நீதிமன்றம் விதித்துள்ள பிணை நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான பிணையாளர்களையும் வசதிகளையும் சமர்ப்பிக்க முடியாததால், பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும் அவர் மீண்டும் சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம், நீண்டகாலமாக விசாரணை முடிவடையாமல் தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலை, நீதித்துறைத் தாமதங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.








