மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் வசிக்கின்ற பொதுமக்களுக்கென பிரத்தியேகமாக சேதனப்பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கொன்று மட்டக்களப்பு மாநகர சபையினால் நகர மண்டபத்தில் நேற்று முன் தினம் (10) நடைபெற்றது.
மாநகர ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் தலைமையில் நடைபெற்ற சேதனப்பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கில் வளவாளர்களாக சுற்றாடல் தொழில்நுட்பத்தில் உயிர்முறைமைகள் தொழில்நுட்பமாணி சிறப்புப் பட்டம் பெற்ற எஸ்.தர்சா, ரீ.கே.டெலியா அருள்நிதி மற்றும் ஏ.அனுஜா ஆகியோர் கலந்துகொண்டு சேதனப்பசளை தயாரிப்பது தொடர்பில் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

இக் கருத்தரங்கில் மாநகரப் பொறியியலாளர் திருமதி சித்ராதேவி லிங்கேஸ்வரன், மாநகர கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் சீ.துஷ்யந்தன் உட்பட மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்தரங்கில் பங்குபற்றிய பயனாளிகளுக்கு சேதனப் பசளை தயாரிக்கும் கொள்கலன்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



