களுத்துறை மாவட்ட முன்னாள் ஐ.தே.க. உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார்.
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடந்த நிகழ்வு ஒன்றின் போது, களுத்துறை மாவட்டத்தில் ராஜித சேனாரத்னவை ஐ.தே.க. அமைப்பாளராக நியமித்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவரது எதிர்ப்பை விக்கிரமசிங்க நிராகரித்ததாக கூறப்படுகிறது, இந்த சம்பவத்தை தொடந்து களுத்துறை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் விஜேமான்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டார்.