வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் மற்றும் ஏலக்காய் பொதிகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
இவரிடமிருந்து சுமார் 10 இலட்சம் பெறுமதியுடைய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 41 மதுபான போத்தல்கள் மற்றும் 25 கிலோகிராம் ஏலக்காய் பொதிகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் நேற்றைய தினம் 06.25 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-168 இல் இந்தியாவின் கொச்சினில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
மேலும், கைப்பற்றப்பட்ட செய்யப்பட்ட பொருட்களையும், அவற்றை கொண்டு வந்த பயணியையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.