அரசு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, நான்கு பேரிடமிருந்து 50 லட்சத்திற்கு மேலான பணத்தை பெற்ற பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது, சந்தேகநபர்கள் இருவரும், குட்டிகல – பதலங்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சந்தேக நபர்கள் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்ப்பட்டதையடுத்து, அதில் ஒருவரை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மற்றைய சந்தேகநபர் தலா ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.