சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயப் பகுதியில் உள்ள அரச (போதி) மரம், கீரி மலையின் இரு தீர்த்தக் கேணிகள் உட்பட யாழ்ப்பாணத்தில் – வடக்கின் உச்சியில் – பழம்பெரும் இடங்களான நான்கை புராதன மையங்களாக அடையாளப்படுத்தி, அவற்றைத் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரத்துக்கு உரியனவாகக் குறிப்பிட்டு, வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.
கொழும்பு ஆட்சியாளர்களின் இந்நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள பல இடங்களில் பௌத்த அடையாளங்கள் உள்ளன என அடையாளப்படுத்தி, அவை தொல் பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட் டுக்கு உரியன எனத் தெரிவிக்கும் வர்த்த மானி அறிவித்தல்கள் பிரசுரிக்கப்பட்டு வந்திருந்தன.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது யாழிலும் நான்கு இடங்கள் அவ்வாறு தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்த மானவை என அடையாளப்படுத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் பிரசுரிக்கப் பட்டுள்ளது.
சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயப் பகுதியில் அமைந்துள்ள சங்கமித்தை அரசமரம் எனக் கூறப்படும்போதி மரம், பருத்தித்துறை கடற்கரைப் பகுதியிலுள்ள சுங்கக் கட்டடம், கீரிமலைக் கேணி கள், தெல்லிப்பளை, இளவாலை பதவதை பிலிப் நேரியார் தேவாலயம் ஆகிய நான்கு இடங்கள் தற்போது வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன.இந்த நான்கு இடங்களும் அடை யாளப்படுத்தப்பட்டு, அவை தொல்லியல்திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்கு உரி யன எனத் தெரிவித்து கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் அறிவிப்பு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் இவ்வாறு சில இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வர்த்தமனியில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அதற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.இவ்வாறானதொரு சூழலில்தான் இப்போது புதிதாக யாழ்ப்பாணத்திலும்
இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு இருக்கின்றது. ஆட்சியாளர்களினால் மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்படும் இத்தகைய செயற்பாடுகளுக்கு மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பறாளாய் முருகன் ஆலயத்தை ஒட்டிய அரச மரத்தை சங்கமித்தையின் இலங்கை வருகையுடன் தொடர்புபடுத்தி தொல்லியல் திணைக்களத்தினால்
அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கின்றது.