சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பை மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட வேண்டும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த நாட்களில், சுற்றுலா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தங்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே மதுபானம் வழங்க முடியும் என்றும் மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.