Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கச்சதீவு தொடர்பில் த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

கச்சதீவு தொடர்பில் த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

”கச்சதீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சதீவைப் பெற வேண்டும்.

இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்” என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு மீட்கப்படுவதே கடற்றொழிலாளர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

”இலங்கை செல்லும் ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள், போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக கடற்றொழிலாளர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன. குஜராத் போன்ற மற்ற மாநில கடற்றொழிலாளர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?

நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும். தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.

ஒன்றிய பிரதமர், ‘கச்சதீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும்.

நமது கடற்றொழிலாளர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம் தமிழக கடற்றொழிலாளர் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.”என கூறியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!
செய்திகள்

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!

July 23, 2026
உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
காணொளிகள்

உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; அருகில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

July 23, 2026
டெங்கு ஒழிப்பு சோதனையில் அதிர்ச்சி; பெலவத்தையில் வீட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு!
செய்திகள்

டெங்கு ஒழிப்பு சோதனையில் அதிர்ச்சி; பெலவத்தையில் வீட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு!

July 23, 2026
500 பவுண் தங்கம் மற்றும் கோடிக்கணக்கான பணத்துடன் 10 பேர் கைது; கண்டியில் அதிர்ச்சி சம்பவம்!
செய்திகள்

500 பவுண் தங்கம் மற்றும் கோடிக்கணக்கான பணத்துடன் 10 பேர் கைது; கண்டியில் அதிர்ச்சி சம்பவம்!

July 23, 2026
அதிவிசேஷ சாராய விலை உயர்வு; போத்தலுக்கு ரூ.20 அதிகரிப்பு உடனடி அமுல்!
செய்திகள்

அதிவிசேஷ சாராய விலை உயர்வு; போத்தலுக்கு ரூ.20 அதிகரிப்பு உடனடி அமுல்!

July 23, 2026
Next Post
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு