இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தான் மறைத்து வைத்திருப்பதாக சில சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் சிரிப்பை வரவழைக்கும் நகைச்சுவை என்று முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறினார்.
நாட்டை சிரிக்க வைக்கும் இது போன்ற நபர்கள் இது போன்ற பிரச்சாரங்களை செய்து தன்னைப் பற்றி தவறான எண்ணங்களை பரப்பி சமூகத்தை தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் டிரான் அலஸ் கூறினார்.

மக்கள் இதுபோன்ற தவறான பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தேசபந்து தென்னகோனை டிரான் அலஸ் மறைத்து வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் கூறுகையிலேயே டிரான் அலஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.