இனி பயனாளர்கள் சர்வதே அழைப்புகளை ஏற்க்க கூடாது!! வாட்ஸ் அப்பின் புதிய எச்சரிக்கை!!
இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுவது வாட்ஸ் அப் செயலி என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,வீடியோ கால் பேசுதல் ,பண பரிவர்த்தனை செய்தல் போன்ற பல சலுககைகளுடன் வாட்ஸ் அப் செயலி அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனமானது தங்களது பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இன்று பெரும்பாலும் பல விதமான மோசடிகள் நடைபெறுகின்றது. பொதுமக்களாகிய நாம் தான் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தேவை இல்லாமல் வரும் எந்த ஒரு சர்வதேச அழைப்புகளையும் ஏற்க வேண்டாம் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்தில் அதிக அளவில் குற்றங்கள் நடந்து வருகின்றது. அதிலும் சபர் கிரைம் பொறுத்தவரை குற்றங்களின் எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது என்றே கூறலாம்.
எனவே பொதுமக்கள் பகிரும் ஒவ்வொரு தகவல்களும் அவர்களுக்கு ஆபத்தாக முடியலாம் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சர்வதேச அளவில் இருந்து வரும் எந்த வித அழைப்புகளையும் ஏற்க வேண்டாம் என்றும் அதனை பொதுமக்கள் மறுத்து விட வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்து தொந்தரவு செய்யும் பட்சத்தில் இருந்தால் இதை பற்றிய முழு விவரத்தையும் 1930 என்ற எண்ணிற்கு பதிவு செய்து விடுங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.