Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 17 வேட்புமனுக்கள் நிராகரிப்பு- 101 வேட்புமனுக்கள் ஏற்பு

மட்டக்களப்பில் 17 வேட்புமனுக்கள் நிராகரிப்பு- 101 வேட்புமனுக்கள் ஏற்பு

1 year ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி மன்றங்களுக்கு, 139 கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன், 118 வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்குதல் செய்துள்ளனர். இதில் 17 வேட்பாளர்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், 101 வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் தெரிவித்தார்

மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் இன்று (20) இடம்பெற்று ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேசமயம் மாவட்டத்தில் 2 நகரசபை 1 மாநகரசபை 9 பிரதேச சபை உட்பட 12 உள்ளுராட்சி மன்றங்களுக்காக, கோறளைப்பற்று வடக்கு சபையில் சர்வின அதிகாரம் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேச சபையில் விநாயகமூர்த்தி விஜயராஜ் தலைமையிலான சுயேச்சைக்குழு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அப்துல்வாப் முகமட் ஊசையின் என்பவருடைய மனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், ஏறாவூர் நகர சபையில் 10 அரசியல் கட்சிகள், ஒரு சுயேச்சைக்குழு உட்பட 11 வேட்பு மனுக்கல் தாக்குததல் செய்யப்பட்ட அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கு 7 அங்கீகரக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேச்சைக் குழுக்களுமாக 9 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் போரதீவுபற்று பிரதேச சபையில் 5 கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்ததுடன் இதில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சிவனேசராசா ஒளிர்வளசுதன் மற்றும் அரசரத்தினம் சப்த தவதீஸ் ஆகியோரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாநகரசபைக்கு 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், சுயேச்சைக்குழு உட்பட 10 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , ஸ்ரீ தொழிலாளர் கட்சி, பொது ஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்த்தியின் கருணாநிதி தர்சிகா என்பவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மண்முனைபற்று பிரதேச சபைக்கு 11 கட்சிகளும் 7 சுயேச்சைக் குழுக்களுமாக 18 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. இதில் முஸ்லிம் காங்கிரஸ், சோமசுந்தரம் மகேந்திரன் தலைமையிலான சுயேச்சைக் குழு, கிருஸ்ணபிள்ளை மற்றும் செல்லத்துரை தங்கவேல் தலைமையிலான சுயேச்சைக்குழு மற்றும் தொழிலாளர் கட்சிகளின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

நல்லதம்பி சுரேந்திரன் சுயேச்சைக் குழுவில் திலகவதி சுரேந்தின், குணசுந்தரம் திவாகர், வடிவேல் பவழக்கொடி ஆகியோரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், கோரளைப்பற்று பிரதேச சபைக்கு 8 கட்சிகளும், 3 சுயேச்சைக் குழுக்கள் உட்பட 11 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் விமலசேன லவக்குமார் தலைமையிலான மற்றும் குணரத்தினம் புலேந்தின் தலமையிலான சுயேச்சைக்குழுக்கள் இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய மக்கள் சக்தியின் செல்லத்தம்பி விமலராஜ் என்பவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு 10 கட்சிகளும், ஒரு சுயேச்சைக்குழு உட்பட 11 வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. இதில் அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது

காத்தான்குடி நகரசபையில் 7 அரசியல்கட்சிகளும், 3 சயேச்சைக் குழுக்கள் உட்பட 10 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. இதில் சர்வஜன அதிகாரம் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுடன், மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு 7 அரசியல் கட்சிகளின் வேட்புமனு தாக்கல் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு 5 கட்சிகளும், ஒரு சுயேச்சைக்குழு உட்பட 6 வேட்புமனு தாக்கல் செய்தன. இதில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது

மாவட்டத்தில் மொத்தமாக 4 இலச்சத்து 55 ஆயிரத்து 520 பேர்வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 444 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி மன்றங்களில் இருந்து மொத்தமாக 274 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
Next Post
தீடீரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!

தீடீரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.