13ஆவது திருத்தம் பற்றி சிங்கள தலைவர்கள் சாதகமாக சிந்திக்கிறார்கள் என நாம் கொள்ளலாம். ஆனால், தமிழ் அர சியல்வாதிகளை பற்றி தெரியாது. இன்று ஒன்று நாளை ஒன்று சொல்வார்கள் – இவ்வாறு தமிழ்
மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அத்துடன், சமஷ் டியை கோருகின்ற தமிழ்த் தரப்புகள் அதனை எவ்வாறு அடையப் போகிறோம்.
என்பதற்கான வழிகளை வெளிப்படுத்தவில்லை – நானும் சொல்லவில்லை. ஆனால், அனைத்து தமிழ்த்
கட்சிகளும் சமஷ்டியைத் தான் கோருகின்றன என்றும் கூறினார்.நேற்று யாழ்ப் பாணத்தில் அவ ரின்
இல்லத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மேலும் அவர் கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்
கட்சியில் முதலில் இருந்தவர்களை இணைத்தால் அவருக்கு நல்லது. ஆனால் அவர்கள் காலை வாருவதற்கு
இருக்கிறார்களா எனச் சொல்ல முடியாது. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதிபதவிக்கு பொருத்தமற்றவர்.
பௌத்தம் வந்து 700 வருடங்களுக்கு பிறகே சிங்களம் வந்தது. சிங்கள மக்கள் பல இடங்களில் இருந்தனர் என்பது போலியானது. தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்துவது பிழையல்ல. ஆனால், அதை சிங்களவரோடு மட்டும் இணைத்து – இங்கே சிங்களவர்கள் இருந்தார்கள் அதனை தமிழர்கள்
ஆக்கிரமித்தார்கள் என்ற பிழையான தகவல் வராமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக தொல்பொருள் திணைக்களத்துடன் பேச வேண்டியது அவசியம்.சமஷ்டிதான் எங்கள் குறிக்கோள் என அனைத்து தமிழ்க் கட்சிகளும் கூறுகின்றோமே தவிர, இந்த வழியில் தான் நாம் சமஷ்டியை அடையப் போகிறோம் என்று எந்தக் கட்சியும் கூறவில்லை – நானும் சொல்லவில்லை.
நாம் பேசும்போது கவனமாக மக்களுக்கு அதிகாரம் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பேச வேண்டும்.நாம் சமஷ்டி பற்றி மட்டும்தான் பேசப்போகிறோம் என்றால் 13ஆவது திருத்தத்தையும் அவர்கள் (அரசாங்கம்)
தராமல் விட்டுவிடுவார்கள்.13ஆவது திருத்தம் பற்றி சிங்கள தலைவர்கள் சாதகமாக சிந்திக்கிறார்கள் என நாம் கொள்ளலாம். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளை பற்றி தெரியாது. இன்று ஒன்று நாளை ஒன்று சொல்வார்கள்.
எமது இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்தால் அவர்களுக்கு ஆயுதம் கொடுப்பது வன்முறையில்
முடியும் என்று கருதினால் புதுச்சேரி போன்று குறிப்பிட்ட சில வேலைகளை செய்யுமாறுஅனுமதியளிக்கலாம் என நான் கூறினேன். இதற்குக் காரணம் நாங்கள் சிறிது சிறிதாக நம் மக்களின் அதிகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகாரத்தை பெற்று அதன் விட்டத்தை பெரிதுபடுத்த வேண்டும்.ஜனாதிபதி 13 குறித்து பாராளுமன்றில் உரையாற்றவுள்ளார். நானும்
கலாநிதி விக்னேஸ்வரனும் இணைந்து ஓர் ஆவணத்தை அவரிடம் கைளயளித்து மாகாண சபையை எவ்வாறு பலமாக்குவது என்ற கருத்துரைகளை கொடுத்திருக்கிறோம். அதை அவர் வரவேற்றுள்ளார் – என்றும் கூறினார்.