வடக்கு, கிழக்குக்கு முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துங்கள். பொலிஸ் அதிகாரத்தை பிரச்னையாக்கி மக்களால் தெரிவு செய்யப்படும்மாகாண சபையை மறுப்பது நியாயமல்ல.இவ்வாறு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் மனோ கணேசன் எம். பி. தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதிதலைவர் வே. இராதா கிருஷ்ணன், உதயகுமார்
ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை இந்தியத்தூதுவரை சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பு தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் எம். பி.,“மாகாண சபை என்பது வடக்கு கிழக்குக்கு மாத்திரம் வரையறுக்கப் பட்ட தல்ல. ஒன்பது மாகாணங்களுக்கும் தேவை. வடக்கு, கிழக்குக்கு மாகாண சபைகள் முழுமையான அரசியல் தீர்வும் அல்ல. ஆனாலும், பொலிஸ் அதிகார
பிரச்னையை காட்டி தேர்தலை நடத்தா மல் இருக்கக்கூடாது.
“தேர்தலை நடத்தி, மாகாண சபை அமைந்த பிறகும் பேசலாம். கடந்த காலங்களில்கூட சட்டத்தில் இடம்
இருந்தாலும், பொலிஸ் அதிகாரம் மாகாண சபைகளுக்கு கிடைக்கவில்லை. வடக்கு – கிழக்கு மாகாண சபைகளும் அவற்றைக் கேட்டு நீதிமன்றத்தை நாடவில்லை” – என்றார்.மேலும், இந்திய தூதரகத்தின் மலையக கல்வி அறக்கட்டளையை புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் 300 கோடி ரூபாய் நன்கொடையை மலையக கல்வி வளர்ச்சிகாகப் பயன் படுத்துங்கள். அந்த நிதி யாருக்காக, எதற்காக வழங்கப்பட்டதோ அந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று தூதுவரிடம் வலியுறுத்தியதாகவும் மனோ எம். பி. கூறினார்.