நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் தற்போது பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் போராட்டம் நடத்தக் கூடாது என அண்மையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலுக்குள் நுழைய முயன்றபோது இந்த பதற்றமான நிலை ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
