தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் பிரிவு 83(c) ஐ மீறி, Pro Care (Pvt) Ltd. மற்றும் Shade of Procare (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மேலும், பின்வரும் கம்பனிகளும்/செயலிகளும், திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் சட்டத்தின் 83(இ) 83(இ) பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டங்களாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் அறிவித்துள்ளது.
- Tiens Lanka Health Care (Pvt) Ltd
- Best Life International (Pvt) Ltd
- Mark – Wo International (Pvt) Ltd
- V M L International (Pvt) Ltd
- Net Fore International (Pvt) Ltd/ Netrrix1
- Fast3Cycle International (Pvt) Ltd
- Sport Chain app, Sport Chain zs society Sri Lanka
- OnmaxDT
- MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group
- Fastwin (Pvt) Ltd
- Fruugo Oline App/ Fruugo Oline (Pvt) Ltd
- Ride to Three Freedom (Pvt) Ltd
- Onet
- Era Miracle (Pvt) Ltd and Genesis Business School
- Ledger Block
- Isimaga International (Pvt) Ltd
- Beecoin App and Sunbird Foundation
- Windex Trading
- The Enrich Life (Pvt) Ltd
- Smart Win Entrepreneur (Pvt) Ltd