குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் இராணுவ சீருடைகளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 40 கிராம் ஐஸ் போதைப்பொருள், இராணுவ சீருடையின் காற்சட்டை மற்றும் தொப்பி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தும் அல்டோ தர்மா மற்றும் ரத்மலானை குடு அஞ்சு ஆகிய இரு பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.