Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் இருவரின் உடல்களை 38 ஆண்டுகளின் பின் சமய முறைப்படி தகனம்

யாழில் இருவரின் உடல்களை 38 ஆண்டுகளின் பின் சமய முறைப்படி தகனம்

1 year ago
in செய்திகள்

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல்கள் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதி பெற்று மீள எடுக்கப்பட்டு கடந்த (23) சமய முறைப்படி தகனக் கிரியைகள் நடாத்தப்பட்டுள்ளன.

1987ஆம் ஆண்டு அ‌க்டோப‌ர் மாதம் இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் நோக்கி முன்னேறுவதற்கு மேற்கொண்ட படை நடவடிக்கையில், யாழ் நகருக்கு மிக அண்மையில் கண்டி வீதியில் உள்ள வீடொன்றில் இருந்த தாயும், அவரது மகனும் இந்திய இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர்.

உயிரிழந்தவர்களுக்கு சமய முறைப்படி கிரியைகள் செய்து தகனம் செய்வதற்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அப் பெண்மணியின் கணவர் வேறு வழியின்றி தனது மனைவியினதும், மகனினதும் உடலை வீட்டு வளவிலேயே அடக்கம் செய்துள்ளார்.

பின்னர் அங்கு கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் ஏனைய பிள்ளைகளுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது ஏனைய பிள்ளைகளுக்கு அவர் தெரிவித்திருந்ததுடன், மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு சமய முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அவரும் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாடு திரும்பிய ஏனைய பிள்ளைகள் தாய் மற்றும் சகோதரனின் உடல்களை மீளத் தோண்டியெடுத்து கிரியைகள் செய்வதற்காக யாழ் மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தனர்.

நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு இந்து சமயக் கிரியைகள் நடாத்தப்பட்டு அவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
Next Post
வீதிகளில் நடமாடித்திரிந்த 05 கட்டாக்காலி மாடுகள் மட்டக்களப்பு மாநகரசபையினால் பிடிக்கப்பட்டது

வீதிகளில் நடமாடித்திரிந்த 05 கட்டாக்காலி மாடுகள் மட்டக்களப்பு மாநகரசபையினால் பிடிக்கப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு