பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை முகநூலில் தரவேற்றம் செய்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் கொஸ்தாப்பர் கைது செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவில் கடமையாற்றி வரும் மட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் கொஸ்தாப்பர் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொத்துவில் பிரதேசத்தில் திருமணம் முடித்த பெண் ஒருவருடன் திருமணம் முடித்துள்ள பொலிஸ் கொஸ்தாப்பர்தகாத உறவில் ஈடுபட்டபோது அதனை புகைப்படம் எடுத்து முகநூலில் பிரசுரித்த சம்பவம் தொடர்பாக கடந்த (25) பொத்துவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரை பொத்துவில் நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதயடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து குறித்த பொலிஸ் கொஸ்தாப்பரை பணியில் இருந்து இடை நிறுத்தியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்
இதேவேளை கடந்த ஜனவரி தொடக்கம் இன்றுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒழுக்ம் மீறி நடந்து கொண்ட 3 பொலிசாரை பணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.