கையூட்டல் பெறுவது தொடர்பில் தற்போது நிலவும் சட்டத்தைக் கடுமையாக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையூட்டல் சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபர் குறித்தும் தராதரம் பாராது விசாரணை ஆரம்பிக்கப்படும் என அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.