Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாடி வைத்திருந்த காரணத்தால் பரீட்சைக்கு அனுமதி மறுக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக மாணவன்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

தாடி வைத்திருந்த காரணத்தால் பரீட்சைக்கு அனுமதி மறுக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக மாணவன்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தாடி வைத்திருந்ததன் காரணமாக விரிவுரைகள் மற்றும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர் ஒருவரை பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.


கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அப்துல் ரஹீம் மொஹமட் என்ற மாணவர் சமர்ப்பித்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன
இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த மனு தொடர்பில், பிரதி வாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு எதிர்வரும் செப் ரெம்பர் 14ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு நீதிபதி அழைப்பாணை அனுப்பியுள்ளார்.மாணவன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் முன்னிலையா கியபோது, தமது கட்சிக்காரர் கிழக்குப் பல்கலைக்கழக தாதியர் பீடத்தின் இறுதியாண்டு மாணவர் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சட்டத்தரணி குறிப்பிடுகையில், அவர் ஒரு முஸ்லிம் மற்றும் தாடியுடன் இருப்பதால்விரிவுரைகள் மற் றும் பரீட்சைகளுக்குச் செல்ல பல்கலைக்கழக நிர்வாகம் அனு மதி மறுத்துள்ளது.பரீட்சை மற்றும் விரிவுரைகளுக்குத் தோற்றுவதற்கு அவசியமானால் தாடியை மழிக்குமாறு நிர்வாகம் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் கூறினார்.மனுதாரர் இஸ்லாம் மதத்திற்கு மாறியவர் என்றும், அவர்மத நம்பிக்கையின்படி தாடி வளர்த்தவர் என்றும், அதை அகற்ற உத்தரவு பிறப்பிக்க
பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு சட்டப்படி அதிகாரம் இல்லை என்றும் சாலிய பீரிஸ் கூறினார்.


பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் இவ்வாறானதொரு சட் டத்தை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை எனவும், குறித்த மாணவர் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கும் போது அவ்வாறானதொரு ஒழுங்குமுறை இருக்கவில்லை எனவும், கடந்த வருடம் இவ்வாறான சட்டத்தை அமுல்படுத்தி யதாகவும் குற்றம் சுமத்தினார்.

இதனால் அவரது மத நம்பிக்கைகள் மற்றும் அவரது கல்வி வாழ்க்கை கடுமையாக தவறான
எண்ணத்துக்கு உள்ளானது. இதனால் இம்மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள பல்கலைக்கழ கப் பரீட்சைக்கு தனது கட்சிக்காரருக்கு தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி
சட்டத்தரணி சாலிய பீரிஸ்வாதிட்டார்.

ஒழுக்காற்று தீர்மானத்தின் அடிப்படையில் பல்கலைக்கழகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி தெரிவித்தார்.குறித்த பல்கலைக்கழகத்தில் உள்ள ஏனைய இஸ்லாமிய மாணவர்களும் இச்சட்டத்திற்கு அமையவே செயற்பட்டு வருவ தாக அரச சட்டத்தரணி தெரிவித்தார்.

பல்கலைக்கழகம் எடுத்த இந்த தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதை தடுக்கும் வகை யில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுவதை தாம் எதிர்ப்பதாகவும் அரச சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இருதரப்பும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதிபதி, மனுதாரர் பல்கலைக்கழகத்திற்குள் பிரவே சிக்கும்போது அவ்வாறானதொரு சட்டம் பல்கலைக்கழகத்தினால் இயற்றப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.அதையும் மீறி கடந்த ஆண்டில் இவ்வாறு சட்டத்தை திணிப்பதன் மூலம் பாதகமான நிலை ஏற்படும் என நீதிபதி குறிப்பிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
“சுய நிர்ணயத்திற்கான மாற்றத்தின் முகவர்களாக பழங்குடியின் இளைஞர்கள்”; வாகரையில் நேற்று பழங்குடிகள் தினம்!

"சுய நிர்ணயத்திற்கான மாற்றத்தின் முகவர்களாக பழங்குடியின் இளைஞர்கள்"; வாகரையில் நேற்று பழங்குடிகள் தினம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.