புதிய நீர் இணைப்புகளுக்கான இணையவழி விண்ணப்ப செயல்முறையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

புதிய நீர் இணைப்புகளைப் பெறுவதற்கு waterboard.lk என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இணைப்பை பெறுவதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் இணைப்புகள் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்ற வேளையில் அடுத்த வாரத்திற்குள் புதிய இணைப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.