கண்டி, பேராதனை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (31) அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இந்த விபத்தில் சிக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த இருவரும் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பேராதனை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.