Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“புதிய கிராமம் – புதிய நாடு” மட்டக்களப்பில் விசேட மீளாய்வு கூட்டம்!

“புதிய கிராமம் – புதிய நாடு” மட்டக்களப்பில் விசேட மீளாய்வு கூட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பல்துறை இணைந்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தனின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) திகதி இடம்பெற்றது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் ஹகமட், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர்களான ஜனக வக்கும்வெற, கௌரவ அசோக் பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா. சாணக்கியன், உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் சுறேன் வட்டகொட, உள்ளிட்ட அமைச்சு மற்றும் திணைக்களங்களின் உயரதிகாரிகள் மற்றும் துறைசார்
உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான ஜனாதிபதி ஆலோசகர் சுறேன் அவர்களது உணவு பாதுகாப்பு தொடர்பான உரையினை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு தொடர்பான பல்வேறு திட்டங்கள் தொடர்பாக இதன்போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா விரிவாக விளக்கமளித்தார்.

குறிப்பாக இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ சந்திரகாந்தன் அவர்களால் மாவட்டத்தின் உற்பதியினை அதிகரிக்கும் பொருட்டும் உணவு உற்பத்தியில் தன்னிறைவடையும் முகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் மீன் மற்றும் இறால் வளர்ப்பு திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பிலும் இத்திட்டதிற்கென புதிய முதலீட்டாளர்களுக்கு அரச காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.

பிரதம அதிதி உள்ளிட்ட அரசியல் பிரிதிநிதிகளின் உரைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காணி உறுதிகள், வீட்டமைப்பு திட்டத்திற்கான காசோலைகள்,விவசாயிகளுக்கான விதைகள், மரக்கன்றுகள், விசேட தேவையுடையோருக்கான உபகரணங்கள், விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், உழவு இயந்திரம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான பஸ் பாஸ் உள்ளிட்டவை பிரதமரின் கரங்களினால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
மீண்டும் கிழக்கு மாகாணத்துக்கு முதலிடுங்கள்; புலம்பெயர்ந்தோருக்கு ஆளுநர் அழைப்பு!

மீண்டும் கிழக்கு மாகாணத்துக்கு முதலிடுங்கள்; புலம்பெயர்ந்தோருக்கு ஆளுநர் அழைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.