ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (04) கொழும்பை வந்தடைந்தார்.
இந்தப் பயணத்தின் போது, இந்தியா – இலங்கை இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரச வைபவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அங்கு உரையாற்றிய நரேந்திர மோடி, திருவள்ளுவரின் குறள் ஒன்றை உதாரணம் காட்டி இலங்கை மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

அதாவது உண்மையான நண்பரின் கேடயம் மற்றும் அவரது நட்பு இல்லை என்றால் எதிரிக்கு எதிரான பெரிய பாதுகாப்பு என்ன என வினவியுள்ளார்.
குறிப்பாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தமையை அவர் இங்கு நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும் இன்று, நான் அவரது முதல் வெளிநாட்டு விருந்தாளியாக இலங்கைக்கு வந்துள்ளேன். இது நமது சிறப்பு உறவின் ஆழத்தைக் காட்டுகிறது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.