இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது.
ரோவர் கொண்ட இந்த விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் திகதி புறப்பட்டது. இந்த விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் வரும் 23 அல்லது 24ஆம் திகதி ரோவரை நிறுவும்.
இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் நிலவின் தென் துருவத்தின் அருகே முதலில் தரையிறங்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனாவுக்கு பின்னர் சந்திரனில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகவும் இருக்கும்.சந்திராயன் 3 விண்கலம் ஒரு
வாரமாக பூமியை சுற்றி வந்தது.செவ்வாய்க்கிழமை சந்திரனைநோக்கிப் புறப்பட்டது. இந்தவிண்கலம் இந்தியாவின் மூன்றாவது விண்கலம் ஆகும். இது முந்தைய பயணங்களுடன் ஒப்பிடுகையில் வெற்றியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா 2008 இல் சந்திராயன் 1சைந்திரனுக்கு அனுப்பியது. இது சந்திர மேற்பரப்பில்நீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்தது. வளிமண்டலம் இருப்பதையும் நிறுவியது.
2019 இல் சந்திராயன் 2ரோவருடன் பயணமானது.இதன் முழு நோக்கம் வெற்றியடையவில்லை. எனினும்,சந்திரனை சுற்றியவாறு இன்றும் ஆய்வு செய்து வருகின்றது.ரோவரை தரையிறக்கும் முயற்சியில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.