Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய விஞ்ஞான நிறுவனம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை தெரிவு

தேசிய விஞ்ஞான நிறுவனம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை தெரிவு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய விஞ்ஞான நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடாத்திய முதலாவது பாடசாலை விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் மட்/ பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியினால் முன்வைக்கப்பட்ட 5 ஆய்வு முன்மொழிவுகளும் இலங்கையின் தலைசிறந்த விஞ்ஞானிகளால் தெரிவு செய்யப்பட்டு பாராட்டினைப் பெற்றுள்ளது.

தேசிய விஞ்ஞான நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சினால் முதல் தடவையாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வு மலரில் பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியின் நாமம் பதிவாகியுள்ளமையும் பெருமைக்குரியதாகும்.

இம்மாநாட்டில் பங்குபற்றிய தமிழ்மொழி மூலமான இரு பாடசாலைகளில் கிழக்கிலிருந்து பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியும் வடக்கிலிருந்து இந்துக் கல்லூரியும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆய்வு விபரங்களும் ஆய்வுக் குழுக்களும்

  1. வாகனப் புகைக்கு எதிரான உயிரியல் கண்காணிப்பு கருவியாக “மாவிலைகளை” பயன்படுத்துதல். இவ்வாய்வானது பங்குபற்றிய 144 ஆய்வுகளுக்குள் 1வது இடத்தினைப் பெற்றுள்ளது.

ரி.அபிட்ஷன், ஜி.போவிலாஷினி, எஸ்.ஷப்தாஞ்சனா ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.

  1. இயற்கைக் காளான்களைப் பயன்படுத்தி கழிவு நீரிலிருந்து நீரின் கடினத் தன்மையை நீக்குதல். வி.நரேந்திரப்பிரஷாத், எஸ்.டிலக்ஷி, ஆர்.அக்ஷிதா ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.
  2. மட்டக்களப்பு மாவட்டம் மகிழூர்முனைப் பகுதியைச் சுற்றி உள்ள திறந்தவெளி கிணற்று நீரின் தரத்தை மதிப்பீடு செய்தல். பி. பிரணவன், யூ.பிறீத்திகா, வி.நதுஷா ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.
  3. இலங்கையின் நான்கு வகையான வாழை இனங்களில் உள்ள எதிர் ஒட்சியேற்றல் (Antioxidant) காரணிகளின் செயற்பாட்டினை மதிப்பீடு செய்தல். எஸ்.மேருகாசன், கே.ரேவந்தியா, பி.ஷப்தவி ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.
  4. க.பொ.த. உயர்தரத்தில் இரசாயனவியல் பாடத்தில் சித்தி பெறுவதற்கு இரசாயனக் கணிப்பின் முக்கியத்துவம். எம்.தருணியன், எஸ்.ஜெயசாதனா, ஜி.நிகாஷினி ஆகிய மாணவர்கள் இவ்வாய்வினை முன்ழொழிந்தனர்.

இம்மாணவர்கள் அதிபர் திரு. எம்.சபேஸ்குமார் அவர்களின் ஆலோசனைக்கமைவாக ஆசிரியர்களான திரு.செ.தேவகுமார், திரு.ரி.யுதர்சன் ஆகியோரினால் வழிப்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!
மட்டு செய்திகள்

டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
Next Post
மாத்தறை மாவட்டம் முழுவதும் 257 எச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 7 தொற்றாளர்கள் தலைமறைவு

மாத்தறை மாவட்டம் முழுவதும் 257 எச்.ஐ.வி தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு; 7 தொற்றாளர்கள் தலைமறைவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு