Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டு மக்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

நாட்டு மக்களுக்கு உறுதியளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

1 year ago
in செய்திகள்

அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக கருதி செய்து முடிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.

இலங்கை இயற்கை வளங்களினால் நிறைந்த தன்னிறைவான நாடாக இருந்த போதிலும் முன்னைய ஆட்சியாளர்களின் திட்டமிடாத செயற்பாடுகள் காரணமாக நாட்டுக்கு அபிவிருத்தி கிட்டாமல் போயுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் படிப்படியாக நிலையானதாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக்கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

கல்கிரியாகம, பஹமினியாகம சிறி சமாதி விகாரையின் தாது வளாகம் மற்றும் சிலை திறப்பு நிகழ்வில் இன்று (30) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

வண. காகம சிறிநந்த தேரரின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி தாது வளாகத்தை திறந்து வைத்ததன் பின்னர் அதற்கு முதலாவதாக மலர் துவி வழிபட்டார்.

அதனை தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தான் ஒருபோதும் பதவிகளையும், பட்டங்களையும் எதிர்பார்த்து செயலாற்றவில்லை என்றும், மக்களின் துயரங்களை உண்மையாகவே கண்ட மற்றும் அனுபவித்த தலைவர் என்ற வகையில் அனைத்து மக்களுக்காகவும் சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்பட்ட மற்றும் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக காணப்படும் நாட்டை தற்போதும் அரசாங்கம் கட்டியெழுப்பியுள்ளதெனவும், எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து முற்றாக விடுக்கும் பொறுப்பை உறுதியாக நிறைவேற்றி, சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் இணைந்த குற்ற வலையமைப்புக்களை உடைப்பதற்கான நிறுவனக் கட்டமைப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அனைவரும் எதிர்பார்க்கும் அபிவிருத்தியடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான நலமிக்க சமூகம் மற்றும் கருணையுள்ளம் கொண்ட பிரஜைகளை உருவாக்குவதில் இந்நாட்டு மகா சங்கத்தினருக்கு முதன்மை பொறுப்பு உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக வண. காகம சிறிநந்த தேரர் முன்னெடுக்கும் சமூக மற்றும் சாசன பணிகளை பாராட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில்

மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.