Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில்

மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில் பொதுவான கைதிகள் வைக்கப்படும் பொது அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இருவருக்கும் சிறைச்சாலை உடை அணிவிக்கப்பட்டு, தூங்குவதற்கு பாய் மற்றும் தலையணை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், சதொச நிறுவனம் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட 14,000 கேரம் பலகைகள் மற்றும் 11,000 தாம் பலகைகளை சட்டவிரோதமாக விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்து, அரசுக்கு 53.1 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பை வழங்கியது.

இதன்படி, அந்தக் காலத்தில் சதொசவின் தலைவராக பணியாற்றிய நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுவதாக மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

இதுதவிர, பிரதிவாதிகளான நளின் பெர்னாண்டோவுக்கு 4 இலட்சம் ரூபாய் அபராதமும், மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை
செய்திகள்

அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை

September 18, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!

September 18, 2026
சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரிய  சாணக்கியன்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரிய சாணக்கியன்!

September 18, 2026
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!
செய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!

September 18, 2026
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; விமல் வீரவங்ச தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!
செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; விமல் வீரவங்ச தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!

September 18, 2026
Next Post
விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க விண்கலம் அனுப்பிய சீனா!

விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிக்க விண்கலம் அனுப்பிய சீனா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு