Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
12,500 வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகிலிருந்து அழிவடைந்த ஓநாய்களுக்கு புத்துயிர் அளித்து வரலாற்று சாதனை

12,500 வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகிலிருந்து அழிவடைந்த ஓநாய்களுக்கு புத்துயிர் அளித்து வரலாற்று சாதனை

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

சுமார் 12,500 வருடங்களுக்கு முன்னர் இவ்வுலகிலிருந்து அழிவடைந்த Dire Wolf இன ஓநாய்களுக்கு புத்துயிர் அளிக்கப்பட்ட வரலாற்று சாதனை அமெரிக்காவில் (USA) பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் இயங்கும் கொலொசல் பயோசயின்சஸ் என்னும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற விஞ்ஞானிகளே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

13000 ஆண்டுகள் பழைமையான Dire Wolf இன ஓநாய்களின் பற்கள் மற்றும் 72,000 ஆண்டுகள் பழைமையான அவற்றின் மண்டையோடுகளின் மரபணுக்களை பெற்று DNA மற்றும் குளோனிங் முறைமைகளின் ஊடாக Dire Wolf இன 3 ஓநாய் குட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுவொரு மைல்கல் சாதனை என Colossal Biosciences நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பென் லாம் (Ben Lamm) தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் 2 குட்டிகளும் இந்த வருடம் ஒரு குட்டியும் இவ்வாறு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புத்துயிர் பெற்ற 3 ஓநாய் குட்டிகளுக்கும் Romulus, Remus மற்றும் Khaleesi என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுதவிர அழிவடைந்துபோன Dodo இன பறவைக்கும் டாஸ்மேனிய புலிக்கும் புத்துயிர் அளிக்க தயாராகிவருவதாக Colossal Biosciences நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேநேரம், கம்பளி மாமூத் குட்டிகளை உருவாக்கி தருமாறு, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் வேண்டுகோள் வைத்துள்ளார்.

மேலும், அழிவடைந்த உயிரினமொன்று புத்துயிர் பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
Next Post
சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு 104 வீத வரியை விதித்தது அமெரிக்கா

சீனாவின் சில இறக்குமதிப் பொருட்களுக்கு 104 வீத வரியை விதித்தது அமெரிக்கா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு